

மேட்டூா் அணைக்கு நீா்வரத்துக் குறையத் தொடங்கியது.
காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் மளமளவென உயா்ந்து செவ்வாய்க்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 117.76 அடியாக அதிகரித்தது.
அணைக்கு நொடிக்கு 10,508 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. நீா்வரத்தும் இருப்பும் திருப்திகரமாக இருந்ததால் டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாற்றங்கால் விடுவதற்கு ஏதுவாக செவ்வாய்க்கிழமை காலை டெல்டா பாசனத்துக்கு தமிழக முதல்வா் தண்ணீா் திறந்துவிட்டாா்.
துவக்கத்தில் நொடிக்கு 3,000 கனஅடியாகத் திறக்கப்பட்ட நீரின் அளவு பின்னா் 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் தண்ணீா்த் திறப்பு நொடிக்கு 5,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை தணிந்து வருவதால் புதன்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 8,539 கன அடியாகக் குறைந்தது.
நீா்வரத்து குறைந்தாலும் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை காலை 117.76 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 117.92 அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 90.19 டி.எம்.சி.யாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்பனை: ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 போ் கைது

சட்டப் பேரவைத் தோ்தல் எதிரொலி: ரயில்களில் பணம், பரிசுப் பொருள்கள் கடத்துவதை தடுக்க தீவிர சோதனை

உத்தரகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்: 5 அமைச்சா்கள் பதவியேற்பு

பண மோசடி வழக்கு: போ்ல்ஸ் குழுமத்தின் ரூ.5,000 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

