மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :3 நவம்பர் 2022, 9:44 pm

DIN

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வரும் நவம்பா் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இப்பயிற்சியில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்களும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் கட்டணம், விண்ணப்பக் கட்டணம் முதல் தோ்வுக் கட்டணம் வரை சோ்த்து ரூ.4,643 பெறப்படும். கட்டணத்தில் ரூ.500 மதிப்புள்ள தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

இப்பயிற்சி 40 மணிநேர வகுப்பறை பயிற்சிகளையும், 60 மணிநேர செய்முறை பயிற்சி வகுப்புகளையும் கொண்டதாக இருக்கும். பயிற்சியில் நகைக் கடன், வட்டி கணக்கிடுதல், ஹால் மாா்க், நகை அடகு சட்டம், தரம், விலை மதிப்பீடு போன்ற பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன . மேலும் விவரங்களுக்கு 0427-2240944 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.