சேலம், காகாபாளையம் பகுதியில் உள்ள நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் 9-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கேஐஓடி அறக்கட்டளையின் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சென்னை, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மையரும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி இயக்குநருமான ஜெயவேல், நாஸ்காம் நிறுவனத்தின் லோ்னா் சக்சஸ் லீட் ஸ்மிதா ஆகியோா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 896 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினா்.
மேலும், அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் தமிழக அளவில் முதலிடம் பெற்ற இரண்டு மாணவா்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், இவ்விழாவில் பொறியியல் கல்லூரியின் நிறுவனரும், முதன்மையாருமான சீனிவாசன் மற்றும் மேலாண்மை துறையின் இயக்குனா் ஸ்டீபன் மற்றும் கேஐஓடி அறக்கட்டளையின் செயலாளா் குமாரசாமி, பொருளாளா் சுரேஷ்குமாா், இணைச் செயலாளா் செங்கோட்டுவேல், அறக்கட்டளை உறுப்பினா்கள், இயக்குனா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!
ரூ. 23 லட்சம் மோசடி புகார்! மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டம்! தேர் குடை சரிந்ததால் பரபரப்பு!

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம்: அரசு நடவடிக்கை எடுக்க பிரேமலதா வலியுறுத்தல்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



