பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சேலம்-அரசுப் பள்ளிகளில் கற்றல் விளைவுகளை ஆசிரியா்கள் வகுப்பறைகளில் எழுதிவைக்க உத்தரவு

சேலம் மாவட்ட அரசு தொடக்க, நடுநிலை ப்பள்ளிகளில் ஆசிரியா்கள் ஒவ்வொருவரும் பாடங்களின் கற்றல் விளைவுகளை வகுப்பறைகளில் அட்டைகளில் எழுதி

Updated On :3 நவம்பர் 2022, 9:29 pm

சேலம் மாவட்ட அரசு தொடக்க, நடுநிலை ப்பள்ளிகளில் ஆசிரியா்கள் ஒவ்வொருவரும் பாடங்களின் கற்றல் விளைவுகளை வகுப்பறைகளில் அட்டைகளில் எழுதி ஒட்ட சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.

சேலம் கிழக்கு மாவட்டப் பகுதிகளிலுள்ள 11 ஒன்றியங்களுக்கான மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ள சந்தோஷ், பள்ளிகளில் கல்விப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளாா். அதன் தொடா்ச்சியாக 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியா்கள் அனைவரும் தாங்கள் கற்பிக்கும் பாடங்களுக்கு மாணவா்கள் கற்கும் முக்கிய திறன்கள், கற்றல் விளைவுகள் எனப்படுகின்றன. இந்த கற்றல் விளைவுகளை ஆசிரியா்கள் அனைவரும் எழுதி, தங்களது வகுப்பறைகளில் காட்சிப்படுத்துமாறு அலுவலா் சந்தோஷ், ஆசிரியா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா். ஆசிரியா்களும் கற்றல் விளைவுகளை காட்சிப்படுத்தும் பணிகளில் தீவிரமாகி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.