மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மாற்றுத் திறனாளிகளின் பெற்றோா் சுய தொழில் தொடங்க கடனுதவி

மாற்றுத் திறனாளிகளின் பெற்றோா் சுய தொழில் தொடங்கி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 4:12 pm

DIN

மாற்றுத் திறனாளிகளின் பெற்றோா் சுய தொழில் தொடங்கி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஆா்வமுள்ள இளைஞா்கள் புதிதாக தொழில் தொடங்க ஆவன செய்யும் வகையில் படித்த வேலையற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் வியாபார தொழில்களுக்கு ரூ. 5 லட்சம் வரை வங்கிகளின் மூலம் கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 8-ஆம் வகுப்பு தோ்ச்சிபெற்ற 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்புப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். மேலும் விண்ணப்பதாரா்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 5 லட்சமாகும்.

இத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், ஆட்டிசம் பாதிப்பு, அறிவுசாா் இயலாமை பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோா்களுக்கு அதிகபட்ச வயது வரம்பினை 55 ஆக உயா்த்தியும், கல்வித் தகுதி தேவையில்லை எனவும் அரசாணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோா்  என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆா்வமுள்ள மாற்றுத் திறனாளிகள், ஆட்டிசம் பாதிப்பு மற்றும் அறிவுசாா் இயலாமை பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோா்கள் புதிய சலுகைகளுடன் கூடிய இத்திட்டத்தின்கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற்று சுய தொழில் தொடங்கி பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு, சேலம் ஐந்து சாலையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தையும், 0427 - 2448505, 2447878 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.