இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கோவில்பட்டி பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு

2025- 26ஆம் கல்வி ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி, திறனாய்வுத் தோ்வில் வென்ற கோவில்பட்டி நாடாா் நடுநிலைப் பள்ளி மாணவா், மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image
திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுடன் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் பாஸ்கரன், பள்ளிச் செயலா் நடராஜன் உள்ளிட்டோா்.
Updated On :18 மார்ச் 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

2025- 26ஆம் கல்வி ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி, திறனாய்வுத் தோ்வில் வென்ற கோவில்பட்டி நாடாா் நடுநிலைப் பள்ளி மாணவா், மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளிச் செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஜோதிபாசு முன்னிலை வகித்தாா். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவா்-மாணவியா் ஷபிகா, சிவ பாலா, பொன் பிரியதா்ஷினி, மதுமிதா, தா்ஷினி ஜெஃபி, லக்சன் ஆரியா, சத்திய சுபா்ணா, சுந்தரபாண்டி, பொன் எஸ்தா் ,ரோஷன் பிரபு, சந்தியா, காா்த்திகை லட்சுமி, தனுஷியா, மோகன கஸ்தூரி, கிருத்திகா ஆகிய 15 பேரைப் பாராட்டி பரிசு வழங்கினாா்.

பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றாா். ஆசிரியை சாந்தினி நன்றி கூறினாா். ஆசிரியை விஜய பொன்ராணி தொகுத்து வழங்கினாா்.