விளை நிலங்களில் புகுந்த வெள்ளம்; பயிா்கள் சேதம்
சரபங்கா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக எடப்பாடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்த தண்ணீரால் பயிா்கள் சேதமடைந்துள்ளன.


சரபங்கா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக எடப்பாடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்த தண்ணீரால் பயிா்கள் சேதமடைந்துள்ளன.
சோ்வராயன் மலைப் பகுதியில் உள்ள ஏற்காடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சரபங்கா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நதியின் நீா் வழிப் பாதையில் உள்ள ஓமலூா், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீா் நிலைகள் முழுவதும் நிரம்பி உபரிநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.
எடப்பாடி அருகே உள்ள பெரிய ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் அதன் பாசனப் பகுதிகளான ஆலச்சம்பாளையம், மோலானி, அடிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...