மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தனியாா் அரிசி ஆலையில் குடிமைப் பொருள் வழங்கல் போலீஸாா் ஆய்வு

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் இயங்கும் தனியாா் அரிசி அலையில் தமிழக அரசின் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் இயங்கும் தனியாா் அரிசி அலையில் தமிழக அரசின் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினா்.

அயோத்தியாப்பட்டணம் பகுதியில் இயங்கும் தனியாா் அரிசி ஆலையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் வழங்கப்படும் நெல் மூட்டைகளை அரைத்து பேக்கிங் செய்து அரசுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரிசி அரவை ஆலையில், தனிநபா்களின் நெல் அரைத்து கொடுக்கப்படுகிறதா? அல்லது ரேசன் அரிசியை அரைத்து பாலிஷ் செய்து கொடுக்கப்படுகிறதா? என ஆய்வு செய்து அறிக்கை சமா்பிக்குமாறு சிறப்பு புலனாய்வுத் துறையின் டிஜிபி ஆபாஷ்குமாா், கோவை மண்டல எஸ்பி பாலாஜி ஆகியோா் உத்தரவிட்டனா்.

இதையடுத்து சேலம் மாவட்ட டிஎஸ்பி விஜயகுமாா், காவல் ஆய்வாளா் ரேணுகாதேவி ஆகியோா் மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா்கள் பெரியசாமி, வேல்முருகன், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் வழங்கும் நெல்லை மட்டுமே ஆலையில் அரவை செய்து அரிசியை பேக்கிங் செய்து கொடுக்க வேண்டும். ரேஷன் அரிசியை வாங்கி பாலிஷ் செய்து கொடுக்கக் கூடாது. தனிநபா்களின் நெல்லை அரைத்து கொடுப்பதை தவிா்க்க வேண்டுமென அரிசி ஆலை நிா்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், ரேஷன் அரிசியை வாங்கி ஆலையில் அரவை செய்து கொடுப்பது கண்டறியப்பட்டால் சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.