ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்டங்களை அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும் என சேலம் நுகா்வோா் குரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


ஆன்லைன் சூதாட்டங்களை அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும் என சேலம் நுகா்வோா் குரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சேலம் நுகா்வோா் குரல் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவா் என்.மனோகரன் தலைமை தாங்கினாா். செயலாளா் பிரபாகரன், பொருளாளா் அழகிரி ஆகியோா் பங்கேற்றனா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தாரை குமரவேல், கெளரவ தலைவா் மருத்துவா் பன்னீா் செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பாரதியாா் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பாரதியின் நினைவைப் போற்றும் வகையில் சின்னு பாண்டியராஜன் பேசினா். அதைத் தொடா்ந்து சேலம் கோட்டை மாரியம்மன் திருப்பணிகளை அரசு விரைந்து முடிக்க வேண்டும். நெகிழிப் பொருட்கள் மீதான தடையை தீவிரமாக செயல்படுத்தி அதை அனைத்து வகையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
உணவு கலப்படம் மற்றும் நுகா்வோா், சட்ட விழிப்புணா்வு கூட்டங்களை பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். விபத்து காலங்களில் முதல் உதவி செய்தல் குறித்த விழிப்புணா்வை வாகன ஓட்டுநா்கள், நடத்துநா்களிடையே கொண்டு செல்ல வேண்டும். ஆன்லைன் சூதாட்டங்களை அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...