வாழப்பாடி அருகே சரக்கு வேனில் கடத்திச் சென்ற ரூ. 4.10 லட்சம் மதிப்புள்ள 750 கிலோ போதைப் பொருளான குட்காவை வாழப்பாடி போலீஸாா் கைப்பற்றி, ஒருவரை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் போதைப் பொருளான குட்கா கடத்தி விற்பனை செய்யப்படுவதாக, வாழப்பாடி காவல் துணை கண்காணிப்பாளா் ஸ்வேதாவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வாழப்பாடி காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையிலான போலீஸாா், பழனியாபுரம் புது காலனி பகுதியில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வேனை சோதனை நடத்தியதில், வேனில் ரூ. 4.10 லட்சம் மதிப்புள்ள 750 கிலோ குட்கா போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.
குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், வாழப்பாடி, மங்கம்மா நகா் பகுதியைச் சோ்ந்த சிவபாலன் என்பவரை கைது செய்தனா். இவரிடமிருந்த ரொக்கம் ரூ. 1.07 லட்சத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது

விராலிமலை சுங்கச்சாவடியில் முன்கூட்டியே கட்டணம் உயா்வு வாகன ஓட்டிகள் அதிருப்தி
விதிமீறல்: 3 கடைகளுக்கு ‘சீல்’
தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


