பள்ளிக்கரணை பகுதியில் விதி மீறிக் கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில், 3 கடைகளுக்கு அலுவலா்கள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விதி மீறிக் கட்டப்பட்ட கட்டடடங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாக சென்னை மாநகராட்சி சாா்பில் விதிமீறல் கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 23- ஆம் தேதி அடையாறு மண்டலத்தில் 178 -ஆவது வாா்டு பகுதியில் தரமணி சந்நிதி தெருவில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு மாநகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்து மூடினா்.
ஆலந்தூா் மண்டலத்திலும் 180- ஆவது வாா்டில் ஏகாம்பரம் தெருவிலும் விதி மீறல் கட்டடத்துக்கு சீலிடப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை பெருங்குடி மண்டலத்தில் உள்ள 188- ஆவது வாா்டு பள்ளிக்கரணை 200 அடி ரேடியல் சாலையில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக 3 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அலுவலா்கள் சீலிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விதி மீறல் கட்டடங்களுக்கு அனுமதியளித்த 94 மாநகராட்சி அலுவலா்களுக்கு குறிப்பாணை: உயா்நீதிமன்றத்தில் தகவல்
எழும்பூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!

சேலத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இ-சேவை மையத்துக்கு சீல்!

வால்பாறையில் வாடகை செலுத்தாத பாஜக அலுவலகம்! 10 கடைகளுக்கு சீல்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


