காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
காவிரி கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை.
காவிரி கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை.

காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கர்நாடகம் மற்றும் கேரளத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மத்திய நீர்வள ஆணையம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க அறிவுறுத்தி உள்ளது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை மாலை மேட்டூர் நீர் தேக்க பகுதியில் உள்ள பண்ணவாடி பரிசல் துறையில் தின்னப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுதா முன்னிலையில் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.

கோட்டையூர் பகுதியில் காவேரிபுரம் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் தண்டோரா மூலம் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டனர். காவிரி கரையோரப்பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் காவிரியில் குளிக்கவோ, துணி துவைக்கவோ மீன் பிடிக்கவோ செல்லக்கூடாது என்றும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த் துறையினரின் எச்சரிக்கையை அடுத்து காவிரி கரையில்முகாமிட்டிருந்த மீனவர்கள் மேடான பகுதிகளுக்கு தங்கள் முகாம்களை மாற்றி சென்றனர். வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 29,072கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 

வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 29,964கன அடியாக அதிகரித்தது. நேற்று மாலை நீர் வரத்து 47,436கன அடியாக அதிகரித்தது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் வியாழக்கிழமை காலை 110.10அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை113.66அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2.56அடி உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 83.71 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் மே மாதத்தில் 2011-ம்ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு16,000கன அடி நீரும் 2006-ம் ஆண்டு வினாடிக்கு 10 ஆயிரம்கன அடி நீரும் வந்துள்ளது. நடப்பு ஆண்டில் தான் மே மாதத்தில் இதுபோல காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com