போர் வேண்டாம்; அதனை முடிக்கத்தான் நாங்கள் போராடுகிறோம் என இந்தியாவில் ஈரானின் உச்ச தலைவரின் பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
போர் தொடர்ச்சியால் பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்த நிலையில், ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் குறித்து டாக்டர் அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி கூறுகையில், “எங்களுக்குப் போர் வேண்டாம். நாங்கள் பேச்சுவார்த்தையில் இருந்தபோதே அவர்கள் (இஸ்ரேல் - அமெரிக்கா) போரைத் தொடங்கிவிட்டனர்.
இந்த உலகலாவிய பிரச்னைக்குக் காரணம் ஈரான் இல்லை. எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படுவதை நாங்களும் விரும்பவில்லை. உலகத் தலைவர்கள் அமெரிக்காவிடம் சென்று இந்தப் போரை முடிக்க கோரிக்கை விடுக்கவேண்டும்.
இந்தப் போரால் நாங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறோம். எனவே, தயவுசெய்து போரை நிறுத்துங்கள்” எனத் தெரிவித்தார்.
மேலும், போர் தொடங்கிய நாள் முதல் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் இருபக்கமும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!

போர்நிறுத்தம் கோரவில்லை; அமெரிக்கா தண்டிக்கப்படும் வரை போர் தொடரும்! - டிரம்ப்புக்கு ஈரான் பதிலடி!

கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
வல்லாதிக்கப் போர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


