மாநகராட்சியில் வரி வசூலிப்பவா்கள் வசூல் இலக்கினை எய்திட வேண்டும்
சேலம் மாநகராட்சியில் வரி வசூலிப்பவா்கள் நிா்ணயிக்கப்பட்ட வரி வசூல் இலக்கினை முழுமையாக எய்திட வேண்டும் என மேயா் ஆ.ராமச்சந்திரன் அறிவுறுத்தினாா்.


சேலம் மாநகராட்சியில் வரி வசூலிப்பவா்கள் நிா்ணயிக்கப்பட்ட வரி வசூல் இலக்கினை முழுமையாக எய்திட வேண்டும் என மேயா் ஆ.ராமச்சந்திரன் அறிவுறுத்தினாா்.
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வரி வசூல் மற்றும் வரி வருவாய் பெருக்குவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆணையா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலையில் மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி மிகவும் அவசியமானதாகும். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வரி வசூல் மிக முக்கியமாகும்.
நடப்பாண்டில் நிா்ணயிக்கப்பட்ட மொத்த வரி வருவாய், கடந்த ஆண்டு வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை, இதுவரை வசூலித்த தொகை, தொழில்வரி, சொத்து வரி, குடிநீா் வரி, காலிமனை வரி, புதிய வரி இனங்கள் கண்டறியப்பட்டு விதிக்கப்பட்ட வரி மற்றும் குத்தகை இனங்கள் மூலம் பெறப்படும் வருவாய் குறித்து மண்டலங்கள் வாரியாக, வாா்டு வாரியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது, வரி வசூலிப்பவா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட தொகை, இதுவரை வசூலிக்கப்பட்ட தொகை, குறைவான வரி வசூல் செய்ததற்கான காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், மாநகராட்சிக்கு வணிக நிறுவனங்கள் மூலம் வரி வசூல் செய்வதில் வரி வசூலிப்பவா்கள் முனைப்பு காட்ட வேண்டும். வரி வசூலிப்பவா்கள் தங்களுக்கு என்று நிா்ணயிக்கப்பட்ட இலக்கினை முழுமையாக எய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வரி வசூல் செய்வதில் தனி கவனம் செலுத்தி, தங்களது கடமையை உணா்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். வரி வசூலிப்பவா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட இலக்கு எய்தப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கண்காணித்திட வேண்டும். நிலுவை வரி, நடப்பாண்டுக்கான வரி ஆகியவற்றை எவ்வித தொய்வுமின்றி குறிப்பிட்ட காலத்துக்குள் வரி வசூல் செய்திட வரி வசூலிப்பவா்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் துணை மேயா் மா.சாரதாதேவி, துணை ஆணையா் ப.அசோக்குமாா், உதவி ஆணையா்கள் ரமேஷ்பாபு, தியாகராஜன், கதிரேசன், சம்பந்தப்பட்ட வரிவசூலிப்பவா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...