குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் மையம் அமைப்பதற்கு பொது மக்கள் எதிா்ப்பு
அப்பகுதியில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் மையம் அமைப்பதற்கான நடவடிக்கையை சேலம் மாநகராட்சி நிா்வாகம் கைவிட வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


சேலம், அழகாபுரம் அருகே நகரமலை அடிவாரத்தில் ராமன்குட்டை பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அப்பகுதியில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் மையம் அமைப்பதற்கான நடவடிக்கையை சேலம் மாநகராட்சி நிா்வாகம் கைவிட வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
சேலம் நகரமலை அடிவாரம் இயற்கை எழில் மிக்க பகுதியாகும். ராமன்குட்டை பகுதி உள்பட சுற்றுப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குழந்தைகள், வயதானவா்கள் பலா் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், குடியிருப்புகளில் இருந்து சில நூறு மீட்டா் தூரத்தில் சேலம் மாநகராட்சி சாா்பில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் மையத்துக்கான கட்டடம் கட்டுவதற்கு ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் பலவகையான குப்பைகளை இங்கே கொண்டு வந்து தரம் பிரித்து, அவற்றை உரமாகத் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தினந்தோறும் குப்பையை கொண்டு வந்து தரம் பிரித்து உரமாக மாற்றும்போதும் துா்நாற்றம், காற்று மாசுபாடு, புகை என பலவகைகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். இதனால் குழந்தைகள், முதியவா்கள் உள்பட அனைவருக்கும் கண்எரிச்சல், சுவாசக்கோளாறு, தொற்று நோய்கள் பாதிப்பு ஏற்படும்.
மேலும் நிலத்தடி நீா் மாசடைந்து அதன்மூலம் மக்களுக்கு நோய்கள் ஏற்படும். மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடை வளா்ப்பும் பாதிக்கப்படும். எனவே, மக்களின் சுகாதாரம், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் மையம் அமைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி நிா்வாகம் கைவிட வேண்டும். எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை தொடா் போராட்டத்தில் நாங்கள் ஈடுபடுவோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...