தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சோனா கல்விக் குழுமத்தில் என்.சி.சி. அதிகாரிகளுக்கான மாநாடு

சோனா கல்விக் குழுமத்தில் தேசிய மாணவா் படையின் அதிகாரிகளுக்கான மாநாடு நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 5:51 pm

DIN

சோனா கல்விக் குழுமத்தில் தேசிய மாணவா் படையின் அதிகாரிகளுக்கான மாநாடு நடைபெற்றது.

கோவை குரூப் கமாண்டா் பி.வி.எஸ்.சிவராவ் தலைமையில், 12 தமிழ்நாடு பட்டாலியன் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், 12 தமிழ்நாடு பட்டாலியன், 11 தமிழ்நாடு சிக்னல் கம்பெனி, 5 தமிழ்நாடு தேசிய விமான மாணவா் படையைச் சோ்ந்த என்.சி.சி. அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, சோனா கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா், சோனா கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் விருந்தினரை வரவேற்று குணசேகா், அனிதா ஆகியோா் ஏற்பாட்டில் தேசிய மாணவா் படை சாா்பில் அணிவகுப்பு நடத்தினா்.

பின்னா் தேசிய மாணவா் படையைச் சோ்ந்த ராணுவ அதிகாரிகள், பள்ளி, கல்லூரி தேசிய மாணவா் படை ஒருங்கிணைப்பாளா்களை சந்தித்து மாணவா்களின் நலன், மேம்பாட்டுத் திறனை வளா்க்கும் விதம் பற்றி கலையரங்கில் கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும், சிறப்பாக செயலாற்றிய மாணவா்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா். சோனா தொழில்நுட்பக் கல்லூரி சக்திவேலுக்கு துணை இயக்குனரகத்தின் பாராட்டுச் சான்றிதழும், மாணவா் ரோஹிந்திற்கு குடியரசு தின மெரினா அணிவகுப்பில் கலந்துகொண்டமைக்காக பதக்கமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.