47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சேலம் - சென்னை இடையே விமான சேவை மீண்டும் தொடக்கம்

31 மாதங்களுக்கு பிறகு சேலம், சென்னை விமான சேவை மீண்டும் துவங்கியது.

News image
Updated On :29 அக்டோபர் 2023, 9:50 am

DIN

31 மாதங்களுக்கு பிறகு சேலம், சென்னை விமான சேவை மீண்டும் துவங்கியது.

சென்னையில் இருந்து சேலம் சென்ற முதல் விமானத்தில் கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை, திரைப்பட நடிகை நமீதா உள்ளிட்டோர் பயணம் செய்தனர். உதான் திட்டத்தில் ட்ரூஜெட் நிறுவனம் மூலம் சேலம் - சென்னை விமான சேவை கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கி 2021ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதையடுத்து சேலத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவை இயக்க வேண்டும் என சேலம் மற்றும் அண்டை மாவட்ட பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையொட்டி 31 மாதங்களுக்கு பிறகு சேலம் சென்னை விமான சேவை இன்று துவங்கியது. சென்னையில் இருந்து சேலம் வந்த முதல் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை, திரைப்பட நடிகை நமீதா, அவரது கணவர் உள்பட 43 பேர் சேலம் வந்தனர். அவர்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் கார்மேகம் மற்றும் எம்பி பார்த்தீபன் மலர் மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். 

Story image

பின்னர் சேலத்தில் இருந்து மீண்டும் சென்னை திரும்பிய விமானத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு உள்பட 64 பயணிகள் சென்றனர். இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் காலை 11:30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டு 12.30 மணிக்கு சேலம் வந்தடையும் எனவும் அதே விமானம் சேலத்தில் இருந்து 12:50க்கு புறப்பட்டு 1:45 மணிக்கு சென்னை சென்றடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 16ஆம் தேதி பெங்களூர் - சேலம் - கொச்சின் வழித்தடத்தில் விமான சேவை தொடங்கி இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.