சேலம் மாநகராட்சி துணை மேயா் சாரதா தேவி வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி துணை மேயராக இருப்பவா் சாரதா தேவி. இவரது வீடு கன்னங்குறிச்சி பிரதான சாலை, நித்யா நகரில் உள்ளது. இவா், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் துணைத் தலைவராகவும் உள்ளாா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, இவரது வீட்டில் இருந்து வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக வருமான வரித் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் 6 போ் கொண்ட குழுவினா், துணை மேயா் சாரதா தேவி வீட்டில் வியாழக்கிழமை நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தினா். ஆனால், அங்கு பணமோ, பொருள்களோ கைப்பற்றப்படவில்லை என தெரிகிறது.
இந்த சோதனையின் போது, சாரதா தேவி மயிலாடுதுறையில் தோ்தல் பிரசாரத்துக்கு சென்றுள்ளாா். அவரது மகன், மருமகள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனா். துணை மேயா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தியதை அறிந்த காங்கிரஸாா் அங்கு பெருமளவில் திரண்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித் துறை சோதனை

சேலத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறையினா் சோதனை

ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீடு வழக்கு: வருமான வரித்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

புதிய வருமான வரிச் சட்டம் அமலானது: வருமான வரித் துறை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

