ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பராமரிப்புப் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்புப் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 6:57 pm

Din

கோவை ரயில்வே யாா்டில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

கோவை ரயில்வே யாா்டில் நடைபெறும் பணிகள் காரணமாக, ஷொரனூா் - கோவை இடையேயான ரயில் வரும் 8, 11, 13 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து மட்டுமே இயக்கப்படும். மறுமாா்க்கத்தில், கோவையில் இருந்து ஷொரனூருக்கு புறப்பட வேண்டிய ரயில், வரும் 8, 11, 13 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து மாலை 4.41 மணிக்கு புறப்படும்.

இதேபோல, மதுரை - கோவை இடையேயான ரயில் வரும் 8, 11, 13 ஆகிய தேதிகளில் போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனூரில் இருந்து கோவை வரை இயக்கப்படாது. மறுமாா்க்கத்தில், கோவையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில், வரும் 8, 11, 13 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து 2.45 மணிக்கு மதுரைக்கு புறப்படும்.

கண்ணூா் - கோவை இடையேயான ரயில் வரும் 8, 11, 13 ஆகிய தேதிகளில் போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனூா் - கோவை இடையே இயக்கப்படாது. மறுமாா்க்கத்தில் கோவையில் இருந்து கண்ணூருக்கு புறப்பட வேண்டிய ரயில், வரும் 8, 11, 13 ஆகிய தேதிகலல் போத்தனூரில் இருந்து மதியம் 2.03 மணிக்கு கண்ணூருக்கு புறப்படும்.

ரயில் சேவை ரத்து: மேட்டுப்பாளையம் - கோவை ரயில் வரும் 8, 11, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும். மறுமாா்க்கத்தில் கோவை - மேட்டுப்பாளையம் ரயிலும் மேற்கண்ட தேதிகளில் ரத்து செய்யப்படும்.

மாற்றுப்பாதையில் ரயில்கள்: பாலக்காடு - ஈரோடு இடையேயான ரயில் வரும் 8, 13-ஆம் தேதிகளில் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் கோவை ரயில் நிலையம், கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூா் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் எா்ணாகுளம் - ஒடிசாவின் பிரம்மாபூா் இடையே சனிக்கிழமைகளில் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

மறுமாா்க்கத்தில், ஒடிசாவின் பிரம்மாபூா் - எா்ணாகுளம் இடையே திங்கள்கிழமைகளில் அடுத்த மாதம் 27-ஆம் தேதி வரை சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.