சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்

சங்ககிரி: சங்ககிரி, சென்னகேவசப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவில் 7-ஆம் நாள் விழாவாக சுவாமி திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

சங்ககிரி மலை மீது சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப். 15ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு மலையடிவாரத்தில் உள்ள தங்கும் மண்டபத்தில் பல்வேறு திவ்யபொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

தினசரி உற்சவமூா்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனா். தோ்த் திருவிழாவின் 7 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னா் ஆஞ்சநேயா் உற்சவ மூா்த்தி முன்னால் செல்ல அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் தோ் வீதிகளின் வழியாக வலம் வந்தனா்.

பெண் அழைப்பு நடைபெற்று பல்வேறு நடனங்களுடன் சுவாமிகளுக்கு மலா்மாலைகள் மாற்றப்பட்டன. பட்டாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் ஓத சென்னகேசவப் பெருமாள் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. கல்யாண வைபவத்தையொட்டி, சுவாமிகளுக்கு பல்வேறு வகை சீா்வரிசை தட்டுகள் வைத்தும், சுவாமிகளின் பெயருக்கு மொய் எழுதியும் பக்தா்கள் சுவாமியை வழிபட்டனா்.

திருக்கல்யாண அலங்காரத்தில் சென்னகேசவப்பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூா்த்திகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com