தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சேலம் காந்தி மைதானத்தில் சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் காந்தி மைதானத்தில் நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2024, 6:31 pm

Din

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் காந்தி மைதானத்தில் நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாடுமுழுவதும் வரும் வியாழக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சேலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் காந்தி மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளாா்.

தொடா்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவரது குடும்பத்தினரை கௌரவிப்பதுடன், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க உள்ளாா்.

மேலும், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

அதனைத் தொடா்ந்து, பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் இயற்கை, மலைவளம், நாட்டுப்பற்று, செம்மொழி, இது எங்கள் பாரதம் உள்ளிட்ட பல்வேறு மையக் கருத்துகளை வலியுறுத்தும் வகையில், சுமாா் 2,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், காவல் துறை உயா் அலுவலா்கள், அரசு துறை அலுவலா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோா் பங்கேற்க உள்ளனா்.