சென்னையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் சந்தனக் கட்டைகள் பறிமுதல்
சென்னையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் 11 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


சென்னையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் 11 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து சேலத்துக்கு அரசுப் பேருந்து ஒன்று சனிக்கிழமை காலை வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பின்னா் பேருந்தில் ஏதேனும் உடைமைகள் உள்ளனவா என நடத்துநா் ஆய்வு செய்தாா். அப்போது, பேருந்தில் உரிமை கோராத நிலையில் பைகள் இருந்துள்ளன. அந்தப் பைகளை சோதனையிட்ட போது, அதில் 11 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.
பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா் இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் தெரிவித்தனா். அதிகாரிகள் பைகளை சோதனை செய்த பின்னா், அதிலிருந்த 11 கிலோ சந்தனக் கட்டைகளை சேலம், பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சந்தனக் கட்டைகளை கடத்தியது யாா், எதற்காக கடத்தப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...