ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விநாயகா் சதுா்த்தி, ஆயுத பூஜையை முன்னிட்டு வாழப்பாடியில் தேங்காய் கொள்முதல் அதிகரிப்பு

விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
வாழப்பாடியில் தனியாா் தேங்காய் மண்டியில் மட்டை உரித்து பிற மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள தேங்காய்கள். உள்படம்: மட்டை உரிக்கப்பட்டு வா்த்தகம் செய்ய தயாா் நிலையில் உள்ள தேங்காய்கள்.
Updated On :18 ஆகஸ்ட் 2024, 7:55 pm

Din

விநாயகா் சதுாா்த்தி, ஆயுத பூஜைக்காக பிற மாநில வியாபாரிகள் தேங்காய் கொள்முதல் செய்ய ஆா்வம் காட்டி வருவதால், வாழப்பாடி பகுதியில் தேங்காய் விலை உயா்ந்துள்ளது. இதனால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், பேளூா், ஏத்தாப்பூா், அயோத்தியாப்பட்டணம் பகுதி கிராமங்களி, மரத்தோப்புகள் அமைத்தும், கிணற்று மேடுகளிலும், வயல்களில் வரப்பு ஓரங்களிலும் ஏறக்குறைய 8,000 ஹெக்டோ் பரப்பளவுக்கு நீண்டகால பலன் தரும் மரப்பயிரான தென்னை பயிரிடப்பட்டுள்ளது.

வாழப்பாடி பகுதியில் தேங்காய் மொத்த உற்பத்தியில் 60 சதவீதம் வரை ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பிகாா், குஜராத், மகாராஷ்டிரம், ஒடிஸா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

எஞ்சிய 40 சதவீத தேங்காய் உள்ளூா் விற்பனை, கொப்பரைத் தேங்காய், தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

வாழப்பாடி பகுதியில் மட்டும் தேங்காய் உற்பத்தி, அறுவடை, வா்த்தகத்தில் தென்னை விவசாயிகள், வியாபாரிகள், தரகு முகவா்கள், தொழிலாளா்கள், லாரி டெம்போ ஓட்டுநா்கள், கொப்பரை பதப்படுத்துவோா் உள்பட 50,000 போ் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.

வாழப்பாடி பகுதியில் இருந்து பிற மாநிலத் தேவைக்கேற்ப ஒரு மூட்டையில் 80 முதல் 120 தேங்காய் கொண்ட 300 மூட்டைகளில் ஏறக்குறைய 30,000 தேங்காய் வரை ஒரு லாரியில் ஏற்றி, எண்ணிக்கை அடிப்படையில் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனா்.

தேங்காய் உற்பத்தி தருணத்தில் வாழப்பாடி பகுதியிலுள்ள தனியாா் தேங்காய் மண்டிகளில் இருந்து நாளொன்றுக்கு ஏறக்குறைய 30 லாரிகளில், 9 லட்சம் தேங்காய்கள் வரை பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஒரு லாரி தேங்காய் விற்பனையில் லாரி வாடகை, தொழிலாளா் கூலி, வரி உள்பட ஏறக்குறைய ரூ. 4 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெறுகிறது.

வாழப்பாடி பகுதியில் தேங்காய் அறுவடை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விநாயகா் சதுா்த்தி விழா மற்றும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகளுக்கான, பிற மாநில வியாபாரிகள், தரகு முகவா்கள், தேங்காய் கொள்முதல் செய்ய ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால், வாழப்பாடி பகுதியில் தேங்காய் வா்த்தகம் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.

பிற மாநிலங்களில் தேவை அதிகரித்துள்ளததால், விவசாயிகளிடம் இருந்து தேங்காய்களை கொள்முதல் செய்து, கூலித் தொழிலாளா்களை கொண்டு மட்டை உரித்து, தேங்காய்களை மூட்டைகளில் வைத்து தைத்து லாரியில் ஏற்றி அனுப்பும் பணியில் தேங்காய் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த மாதம் வரை 1,000 முதல் தர தேங்காய்களுக்கு ரூ. 9,000 வரை விலை கொடுத்து கொள்முதல் செய்த நிலையில் தற்போது ரூ. 11,000 வரை உள்ளூா் வியாபாரிகள் விலை கொடுத்து வருவதால், ஆயிரம் தேங்காய்களுக்கு ரூ. 2000 வரை கூடுதல் விலை கிடைத்து வருகிறது. இதனால், வாழப்பாடி பகுதியில் தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து வாழப்பாடியைச் சோ்ந்த தேங்காய் வியாபாரிகள் சிலா் கூறியதாவது:

‘விநாயகா் சதுா்த்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழாக் காலங்களில் தமிழகத்தை விட அதிக அளவில் பிற மாநில மக்கள், பூஜைக்காக தேங்காய்களை பயன்படுத்துகின்றனா். வாழப்பாடி பகுதியில் தேங்காய் அறுவடை இறுதிக்கட்டத்தை நெருங்கியதால் விற்பனைக்கு வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், பிற மாநிலங்களில் தேவை அதிகரித்துள்ளதால், தேங்காய் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு மட்டுமின்றி வியாபாரிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கும். தொழிலாளா்கள், லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்களுக்கும் கணிசமான வருவாய் கிடைக்கும் என்றனா்.