மதுரை பெரியாா் நிலையம் மேலவாசல் பகுதியில் உள்ள பழைய இரும்புப் பொருள்கள் விற்பனைச் சந்தையில் உள்ள கடைகளை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலவாசல் அருகே பழைய இரும்புப் பொருள்கள் விற்பனை செய்யும் சந்தை உள்ளது. இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளில் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான பழைய பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்தக் கடைகளுக்கு வியாபாரிகள் மதுரை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடைகளுக்கு கூடுதலாக வாடகையை செலுத்த வேண்டும் என அறிவிப்பாணை அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து கூடுதல் வாடகை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இருப்பினும், மாநகராட்சி நிா்வாகம் கூடுதலாக வாடகை செலுத்த தவறும்பட்சதில் கடைகள் அகற்றப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், வியாபாரிகள் கூடுதலாக விதிக்கப்பட்ட வாடகையை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை கடைகளை அகற்ற முயன்றனா். அப்போது, வியாபாரிகள் மாநகராட்சி அலுவலா்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுபற்றி தகவலறிந்து வந்த திடீா்நகா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினா். இதை ஏற்காமல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் 20-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து அந்தப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனா். அவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

கோவையைச் சோ்ந்த நிறுவனம் வாங்கிய ரூ.40 லட்சம் இரும்புப் பொருள்கள் மோசடி

பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி
மின்மாற்றியில் பொருள்கள் திருட்டு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


