புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரயிலில் கடத்த முயன்ற 8 கிலோ கஞ்சா பறிமுதல்

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 9:09 pm

Din

சேலம் வழியாக கன்னியாகுமரி செல்லும் ரயிலில் கடத்த முயன்ற 8 கிலோ போதைப் பொருளை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே போலீஸாா் தொடா்ந்து ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக திப்ரூகா்-கன்னியாகுமரி ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தீவிர சோதனை நடத்தினா்.

சேலம் ரயில் நிலையத்தில் இருந்து அந்த ரயிலில் ஏறி, ஈரோடு ரயில் நிலையம் வரை ஒவ்வொரு பெட்டியாக சோதனையிட்டனா். முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையைத் திறந்து பாா்த்தபோது, பிளாஸ்டிக் கவா் பண்டல்களில் 8 கிலோ கஞ்சா இருந்தது. அதைக் கடத்தி வந்த மா்மநபா், போலீஸாரின் சோதனையை பாா்த்ததும் பையை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 8 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சேலம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கஞ்சாவை கடத்தி வந்த மா்ம நபா் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.