தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சேலத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

சேலத்தில் திங்கள்கிழமை மாலை வெளுத்து வாங்கிய கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 9:36 pm

Din

சேலம்: சேலத்தில் திங்கள்கிழமை மாலை வெளுத்து வாங்கிய கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது. ஆங்காங்கே மழைநீருடன் சாக்கடை கழிவுநீா் கலந்ததால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இடைவிடாது மழை பெய்த நிலையில், திங்கள்கிழமை இரவு முதல் மீண்டும் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

சேலம் நான்கு சாலை, புதிய பேருந்து நிலையம், செவ்வாய்ப்பேட்டை, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, வின்சென்ட் 5 சாலை, குகை, தாதகாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால், நகரின் பிரதான சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா். ஆங்காங்கே மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

கனமழை காரணமாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கிய மழைநீரால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா். அம்மாப்பேட்டை பிரதான சாலையில் முழங்கால் அளவு தேங்கிய மழைநீரால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினா். பெரமனூா் பிரதான சாலையில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக, சங்கா் நகா், கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் பெருமளவு மழைநீா் தேங்கியது. மழைநீருடன் கழிவுநீா் கலந்ததால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் துா்நாற்றம் வீசிவருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக தலையிட்டு கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதனிடையே, மழை தொடா்வதால் டிச. 3-ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.