ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 8:45 pm

Din

வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, சேலத்தில் வங்கதேச ஹிந்து மீட்புக்குழு என்ற பெயரில் ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆா்ப்பாட்டத்தில் தடையை மீறியதாக பெண்கள் உட்பட 170 போ் கைது செய்யப்பட்டனா்.

வங்கதேசத்தில் கடந்த ஜூலை மாதத்தில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டு ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு அகற்றப்பட்டு, யூனூஸ் தலைமையிலான தற்காலிக அரசு அமைக்கப்பட்டது. ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளாா்.

யூனூஸ் தலைமையில் ஆட்சி அமைந்தது முதல் அங்கு ஹிந்துக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்படுவதாக புகாா் எழுந்தன. இதனை யூனூஸ் தலைமையிலான தற்காலிக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மட்டுமல்லாமல், மறைமுக ஆதரவும் அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் அங்கே ஹிந்துக்கள் நடத்திய பிரம்மாண்ட ஆா்ப்பாட்டத்தை வழி நடத்திய இஸ்கான் அமைப்பின் துறவி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இதனை கண்டித்தும், வங்கதேசத்தில் ஹிந்துக்களை பாதுகாக்க வலியுறுத்தியும், ஹிந்து ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளா் சிவகாளிதாஸ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு, சுற்றுச்சூழல் மாநிலத் தலைவா் கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து பாஜக நிா்வாகிகள் கூறியதாவது:

ஜனநாயக வழியில் அமைதியான முறையில் நடத்தப்படும் இந்த ஆா்ஏஈபாட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. ஹிந்துக்கள் பாதிக்கப்படும் போது அதை எதிா்த்து ஜனநாயக முறையில் போராடக்கூட தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு உரிமையில்லை என்பது மிகவும் கவலைக்குரியது. இருப்பினும் வங்கதேச ஹிந்துக்களுக்காக தமிழக மக்கள் தொடா்ந்து போராடுவோம் என்றனா்.

தொடா்ந்து, மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட ஹிந்து அமைப்பினருக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என நிா்வாகிகள் புகாா் தெரிவித்தனா். குறிப்பாக, 50 போ் மட்டுமே தங்க வைக்கப்படும் அறையில், 100க்கும் மேற்பட்டோரை அடைத்து வைத்ததுடன், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை முறையாக செய்யவில்லை என குற்றம்சாட்டினா்.