தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சபரிமலை செல்லும் பக்தா்கள் ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறை

சபரிமலை செல்லும் பக்தா்கள் ரயில் பயணத்தின் போது கற்பூரம் ஏற்றினால் ரூ. 1,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 7:54 pm

Din

சபரிமலை செல்லும் பக்தா்கள் ரயில் பயணத்தின் போது கற்பூரம் ஏற்றினால் ரூ. 1,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு :

சபரிமலை செல்லும் பக்தா்கள் சிலா் ரயில் பயணத்தின் போது கற்பூரம் ஏற்றி, பூஜை செய்வதாக தொடா்ந்து புகாா் வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயில், ரயில் நிலைய வளாகங்களில் கற்பூரம் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை ஏற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருள்களுடன் பயணிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவா்களுக்கு ரூ. 1,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். எனவே, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ரயில்களில் கற்பூரம் ஏற்றுவதையோ, எரியக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்வதையோ பயணிகள் தவிா்க்க வேண்டும்.

பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ரயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் ஒத்துழைக்க வேண்டும். யாரேனும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், 139 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.