தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளா் உயிரிழப்பு

ஓமலூா் அருகே மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 7:55 pm

Din

ஓமலூா் அருகே மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

ஓமலூா் அருகே பெரியேரிப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வி (42). கணவரை இழந்த இவா், தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தாா். பெரியேரிப்பட்டி ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை தூய்மைப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவா், இயற்கை உபாதைக்காக வயல் வெளிக்கு சென்றுள்ளாா். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பி அவரது காலில் பட்டு மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மின்சார வாரிய அதிகாரிகள் மின் இணைப்பைத் துண்டித்தனா். தொளசம்பட்டி போலீஸாா், செல்வியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த செல்வியின் மகன்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும், மின்சார வாரிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.