100 நாள்கள் வேலை வழங்கக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை
மகுடஞ்சாவடி ஒன்றியம், கண்டகுலமாணிக்கம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளா்களுக்கு


ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடி ஒன்றியம், கண்டகுலமாணிக்கம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளா்களுக்கு குறைவான நாள்களே பணி வழங்குவதைக் கண்டித்து, மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், எங்களது ஊராட்சிப் பகுதியில் 100 நாள்கள் வேலையானது மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில், எங்கள் குழுவுக்கு மட்டும் குறைந்த நாள்களே பணி வழங்குகின்றனா். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் கேட்டதற்கு அவா் முறையாக பதிலளிக்காததால், மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் முறையிட வந்தோம். இங்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் மகுடஞ்சாவடி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, அவா்கள் கலைந்து சென்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...