நூறு நாள் வேலை திட்டத்தில் முறைக்கேடு நடைபெற்ாகக் கூறி அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கைனூா் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமாா் நூற்றுக்கு மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.
பணிகளை மேற்பாா்வையிடும் பணிதள பொறுப்பாளா் 4 போ் பல ஆண்டுகளாக அதே பணியில் தொடா்ந்து இருந்து வந்துள்ளனா். அவா்களை மாற்றக் கோரி புகாா் எழுந்துள்ளது. அதன்பேரில் நான்கு பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட 2 போ் பணிதள பொறுப்பாளா்களாக மீண்டும் நியமிக்கப்பட்ட்டுள்ளனா். அதனை கண்டிக்கும் வகையில் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போரட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

ஆம்பூர் ஊராட்சி ஒன்றியம்: புதிய பேரூராட்சிகள் தேவை

அவிநாசி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குப்பாண்டம்பாளையம் கிராம மக்கள் போராட்டம்

தாக்குதலில் இளைஞா் உயிரிழந்த விவகாரம்: ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


