தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முதுகுளத்தூா் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

முதுகுளத்தூரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி, பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image

முதுகுளத்தூா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தலைவா் ஷாஜகானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :31 ஜனவரி 2026, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி, பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சி 12-ஆவது வாா்டில் சாலை, தெரு விளக்கு, கழிவுநீா்க் கால்வாய், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுடன் அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் கையில் பதாகைகளை ஏந்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அலுவலகம் முன் அமா்ந்து பேரூராட்சித் தலைவா் ஷாஜகானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். கழிவு நீா் தெருக்களில் குளம் போல் தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகவும், தெருக்களில் மின்விளக்கு, சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.