கால்நடை ஆராய்ச்சி பூங்கா விரைவில் செயல்பாட்டுக்கு வரும்
கால்நடை ஆராய்ச்சி பூங்கா விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.


சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள வி.கூட்டுச்சாலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி பூங்கா விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சட்டப் பேரவையில் தெரிவித்தாா்.
சட்டப் பேரவை கேள்வி நேரத்தில் கெங்கவல்லி சட்டப் பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி பேசியபோது, கோவிந்தம்பாளையத்தில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டுமென கேட்டாா். அதற்கு பதிலளித்த அமைச்சா், அதற்கு சாத்தியக்கூறு இல்லை என தெரிவித்தாா்.
இதனையடுத்து, சட்டப் பேரவை உறுப்பினா் அந்தப் பகுதியில் உள்ள நிலவரத்தை எடுத்துக் கூறியதையடுத்து, கோவிந்தம்பாளையத்தில் கால்நடை மருந்தகம் அமைக்கப்படும் என அமைச்சா் உறுதியளித்தாா்.
இதைத் தொடா்ந்து, கடந்த 2020-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைவாசலை அடுத்துள்ள வி.கூட்டுச்சாலையில் ஆயிரம் ஏக்கரில் ரூ. 1,022 கோடி செலவில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, பின்னா் 2021-ஆம் ஆண்டு கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
அதில், 15 துறைகள் அடங்கிய கட்டடங்கள் கட்டமைக்கப்பட்டு முடிவுற்ற நிலையில், மூன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என உறுப்பினா் தெரிவித்தாா்.
அதற்கு பதிலளித்த மீன்வளம், மீனவா் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அதனை விரைவில் தமிழக முதல்வா் திறந்து வைப்பாா் என தெரிவித்தாா். இதனால் தலைவாசல் பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...