கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சத்துணவு பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சத்துணவு பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்


10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தற்போது சத்துணவு பணியில் சமையல் உதவியாளா் பணிக்கு ரூ. 3,000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்வதை நிறுத்தவும், ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளா்களுக்கு ரூ. 6,750 குடும்ப ஓய்வூதியம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியரே ஏற்று நடத்திட ஆணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு வட்டாரத் தலைவா் சொா்ணலதா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், துணைத் தலைவா் ராணி, செயலாளா் விஜயா, பொருளாளா் பானு, பணியாளா்கள் கலந்துகொண்டனா். பின்னா் மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா் மலா்விழியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...