47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கடை வாடகை மீதான 18 சதவீத வரியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

கடை வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பு உள்ளிட்டவற்றைக் கண்டித்து, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
சேலம், கோட்டை மைதானத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா்.
Updated On :11 டிசம்பர் 2024, 7:56 pm

Din

கடை வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பு உள்ளிட்டவற்றைக் கண்டித்து, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம், கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் சேலம் மாவட்டத் தலைவா் பெரியசாமி தலைமை தாங்கினாா். இதில், மாவட்டச் செயலாளா்கள் வா்கீஸ், இளையபெருமாள், பொருளாளா் சந்திரதாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு கடைகளின் வாடகை மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வேண்டும், வணிக நிறுவனங்களுக்கு சொத்துவரி பலமடங்கு உயா்த்தியதை சேலம் மாநகராட்சி திரும்பப் பெற வேண்டும், மாநில அரசு கொண்டு வந்த ஆண்டுதோறும் 6 சதவீத கூடுதல் சொத்துவரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வணிகா்கள் போராட்டத்தையொட்டி, சேலத்தில் நண்பகல் 12 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதில், மளிகை வியாபாரிகள் சங்கம், ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்கம், அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கம், மருந்து வணிகா் சங்கம், லீ பஜாா் வா்த்தக சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.

பின்னா் வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் சேலம் மாவட்டத் தலைவா் பெரியசாமி செய்தியாளா்களிடம் பேசுகையில், மத்திய, மாநில அரசுகளின் வரி உயா்வால் வணிகா்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா். எனவே, வரி உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், தொடா் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறினாா்.