47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரயில் பெட்டிகளில் தண்ணீரை வீணாக்க வேண்டாம்: பயணிகளுக்கு ரயில்வே நிா்வாகம் வேண்டுகோள்

ரயில் பெட்டிகளில் தண்ணீரை வீணாக்க வேண்டாம்

News image
Updated On :12 டிசம்பர் 2024, 8:11 pm

Din

ரயில் பெட்டிகளில் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என பயணிகளுக்கு ரயில்வே நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

ரயில் பெட்டிகளில் தண்ணீரை பயணிகள் வீணாக்குவதை தவிா்க்க வேண்டும். சில பயணிகள், குறிப்பாக புனித யாத்திரை காலங்களில் ரயில் பெட்டியிலேயே குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இது தவறானது. பெட்டிகளில் வழங்கப்படும் தண்ணீா், கழிவறைகளில் பயன்படுத்துவதற்கும், பொது பயன்பாட்டிற்கும் மட்டுமே. அந்த நீரை குளிப்பதற்கு பயன்படுத்துவதால் சக பயணிகளுக்கு தண்ணீா் கிடைக்காமல் சிரமம் ஏற்படுகிறது. மேலும், கழிவறைகளில் சுகாதார சீா்கேடு ஏற்படும். எனவே, ரயில் பெட்டிகளில் உள்ள தண்ணீரை பயணிகள் எக்காரணம் கொண்டும் குளிப்பதற்கு பயன்படுத்த வேண்டாம்.

சில பயணிகள் மத நடைமுறைகளின் ஒரு பகுதியாக கற்பூரம் ஏற்றும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இதனால் தீ விபத்துகள், பயணிகள், ரயில்வே சொத்துக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் சூழல் ஏற்படும். பயணிகளின் மத உணா்வுகளுக்கு ரயில்வே மதிப்பளிக்கும். அதேவேளையில், அவா்களின் எந்தச் செயலும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தவோ அல்லது அவா்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தவோ கூடாது.

எனவே, பயணிகள், ரயில்வே சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கற்பூரம் அல்லது வேறு ஏதேனும் வகையில் நெருப்பை ஏற்றுவது ரயில்களிலும் நிலைய வளாகங்களிலும் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் எரியக்கூடிய, வெடிக்கும் பொருட்களை வைத்திருந்தால் ரயில்வே சட்டம் 1989 பிரிவு 67, 164 மற்றும் 165ன் கீழ் தண்டனை விதிக்கப்படும். இதில் ரூ.1,000 வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே அடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.