47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கருமந்துறை அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டம், கருமந்துறை, அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் பழச்செடிகளின் ரகம், தரம் குறித்து ‘நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி ஆய்வு செய்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 7:48 pm

Din

சேலம் மாவட்டம், கருமந்துறை, அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் பழச்செடிகளின் ரகம், தரம் குறித்து ‘நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்கு பின்னா் அவா் தெரிவித்ததாவது:

கருமந்துறை, அரசு தோட்டக்கலைப் பண்ணையானது சேலத்தில் இருந்து சுமாா் 65 கி.மீ தொலைவில் கல்வராயன் மலையில் 1,037 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 482 ஏக்கரில் மா பழந்தோட்டமும், மீதமுள்ளவற்றில் கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, பலா உள்ளது. இந்தப் பண்ணையில் 60 தொழிலாளா்கள் பணியாற்றுவதன் மூலம் 60 குடும்பங்களுக்கு இந்தப் பண்ணை வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது.

கருமந்துறை அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ஆண்டுதோறும் 1,50,000 எண்ணிக்கையிலான அல்போன்சா, இமாம்பசந்த், பங்கனப்பள்ளி, மல்கோவா உள்ளிட்ட மா ஒட்டு செடிகளும், 8,000 எண்ணிக்கையிலான எல்-49, அா்கா கிரன் உள்ளிட்ட கொய்யா பதியன்களும், 20,000 எண்ணிக்கையிலான என்ஏ-7, கிருஷ்ணா, காஞ்சன் உள்ளிட்ட நெல்லி பதியன்களும், 12,000 எண்ணிக்கையிலான சப்போட்டா ஒட்டுகள் என மொத்தம் ரூ. 1.75 கோடி மதிப்பிலான செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நேரடி விற்பனை மூலமாகவும், திட்ட மானியத்துடனும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அங்கக இடுபொருள்களான மண்புழு உரம், பஞ்சகவ்யம், தசகவ்யம் மற்றும் மண்புழு குவியல் நீா் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன.

கருமந்துறை, அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மா, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி, சப்போட்டா உள்ளிட்ட நடவுச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் வழங்கப்பட்டு வருவது குறித்தும், எலுமிச்சை புல் வகைகள், யூகலிப்டஸ் இலைகளிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் பணிகள் குறித்தும் நேரில் ஆய்வு செய்யப்பட்டது.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் 22,489 விவசாயிகளுக்கு 11,17,910 கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் செடிகள், இயற்கை இடுபொருள்களை விவசாயிகள் குறைந்த விலையில் தரமுள்ளதாக பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.