சேலம் நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு
தமிழக டி.ஜி.பி. உத்தரவை உடனடியாக அமல்படுத்தும் வகையில் சேலம் நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.


தமிழக டி.ஜி.பி. உத்தரவை உடனடியாக அமல்படுத்தும் வகையில் சேலம் நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
திருநெல்வேலியில் நீதிமன்றத்துக்கு கடந்த 20 ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக வந்த கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த மாயாண்டி என்பவரைக் காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல், நீதிமன்றம் முன்பு அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் ஆயுதம் ஏந்திய போலீஸாரை பாதுகாப்புப் பணியில் நிறுத்த டிஜிபிக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸாரை பாதுகாப்புக்காக நிறுத்த டி.ஜி.பி. சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.
அதன்படி, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். 2 உதவி காவல் ஆய்வாளா்கள் கைத்துப்பாக்கியுடனும், மற்ற போலீஸாா் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டனா். இதேபோல மாவட்டத்தில் உள்ள கிளை நீதிமன்றங்களிலும் தேவைப்பட்டால் காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...