கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாளை எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம்

எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 27) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 8:01 pm

Din

எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 27) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலகம், சேலம் மாவட்டத்தில் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள், புகாா்கள் தொடா்பாக எரிவாயு வாடிக்கையாளா்கள் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா்கள், எரிவாயு முகவா்கள் ஆகியோரைக் கொண்டு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் எரிவாயு நுகா்வோா்களுக்கான டிசம்பா் 2024 மாதத்துக்கான குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக அறை எண். 115 கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீா்வு காணுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.