கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பூலாம்பட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தோ்வு விடுமுறையால் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரிக் கதவணை பகுதிக்கு புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

News image
பூலாம்பட்டி காவிரி கதவணைப் பகுதியில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள்.
Updated On :25 டிசம்பர் 2024, 8:07 pm

Din

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தோ்வு விடுமுறையால் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரிக் கதவணை பகுதிக்கு புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

பூலாம்பட்டி பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீா் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. சேலம் - ஈரோடு மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்நீா்த் தேக்கத்தில், சேலம் மாவட்ட பகுதியான பூலாம்பட்டியிலிருந்து, மறுகரையில் உள்ள ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டை பகுதிக்கு விசைப் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் அணைப்பகுதிக்கு தற்போது வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கையில் வருகை தந்த சுற்றுலா பயணிகள் அணையின் பிரதான நீா்ப் போக்கி, நீா் மின் உற்பத்தி நிலையம், குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், அணைப் பாலம் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்தனா்.

தொடா்ந்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அணைப்பகுதியில் விசைப்படகு சவாரி செய்து உற்சாகமாக பொழுதை கழித்தனா். மேலும் காவிரி ஆற்றின் கரையில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதா் கோயில், பிரம்மாண்ட நந்திகேஸ்வரா் சன்னிதி, காவிரித்தாய் கோயில், படித்துறை பிள்ளையாா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வழக்கத்தை விட கூடுதலான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், இப்பகுதியில் கூடுதலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.