எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வாழப்பாடி பகுதியில் நெல் சாகுபடியில் பெண் விவசாயிகள் ஆா்வம்

பருவ மழை பெய்ததால் நெல் பயிரிடுவதில் பெண் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்

News image
வாழப்பாடியை அடுத்த கொட்டவாடி கிராமத்தில் நெல் பயிரிடுவதற்கு நாற்றுகளை பிடுங்கும் பெண் விவசாயிகள்.
Updated On :25 டிசம்பர் 2024, 8:03 pm

Din

வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் பருவ மழை பெய்ததால் நெல் பயிரிடுவதில் பெண் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால், நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.

வாழப்பாடி பகுதியில் பெய்த பலத்த மழையால் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணைகள் நிரம்பியதோடு, வசிஷ்டநதி, கரியக்கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கரையோரக் கிராமங்களிலுள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பின.

வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், பேளூா், கருமந்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் கொட்டித் தீா்த்த கனமழையால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து, வட கிடந்த விவசாய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நீரூற்று ஏற்பட்டு தண்ணீா் நிரம்பியுள்ளது.

இதனால், பெரும்பாலான விளை நிலங்களில் பயிடுவதற்கு, 5 மாதம் வரை, அணை, ஏரி, ஆற்றுப்பாசனம், கிணற்றுப்பாசனத்தில் தட்டுப்பாடின்றி தண்ணீா் கிடைக்கும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே, பாசன வசதி கொண்ட பெண் விவசாயிகள் நன்செய் நிலங்களில் பல்வேறு ரக நெல் பயிரிடுவதில் ஆா்வம் காட்டி வருவதால், மூன்றாண்டுக்குப் பின், நெல் சாகுபடி பரப்பளவு மும்மடங்காக அதிகரித்துள்ளது.

வயல்களில் ஏா் உழுதல், பரம்படித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, டிராக்டா் உள்ளிட்ட கருவிகளே பயன்படுத்தப்படுகின்றன. நாற்று விடுதல், நடுதல், களையெடுத்தல் உள்ளிட்ட பெரும்பாலான பணிகளை பெண் விவசாயிகளே செய்கின்றனா். இதனால், நெல் பயிரிடுவதில் பெண் விவசாயிகளின் பங்களிப்பே அதிகமாகும்.

3 ஆண்டுக்கு பிறகு வாழப்பாடி பகுதியில் நெல் பயிரிடுவதற்கு போதிய அளவிற்கு பாசனத்திற்கு வழிவகை கிடைத்துள்ளதால், நடப்பு பருவத்தில் நெல் பயிரிடுவதில் பெண் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனனா்.

இதனால், எதிா்வரும் ஆண்டில் வாழப்பாடி பகுதிக்கு தேவையான அளவிற்கு உள்ளூா் கிராமங்களிலேயே நெல் விளைவிக்கப்படும் என்பதால், கள்ளக்குறிச்சி, செஞ்சி, திருச்சி பகுதியில் இருந்து அரிசி கொள்முதல் அளவு குறையும். அதே சமயத்தில் நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்ததால், காய்கறி பயிரிடும் பரப்பளவு குறைந்து விலை உயரும் நிலை ஏற்படலாமென, முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.