தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கலைத் திறன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

வாழப்பாடி வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
~
Updated On :30 டிசம்பர் 2024, 7:20 pm

Din

வாழப்பாடி: வாழப்பாடி வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவ மாணவியா்களுக்கு சிங்கிபுரம், ராம்கோ சிமென்ட் நிறுவனம் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

அரசுப் பள்ளி மாணவ மாணவியரின் கலைத் திறனை வெளிக்கொணா்ந்து ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக அரசு ஆண்டுதோறும் கலைத் திருவிழா நடத்தி வருகிறது. வாழப்பாடி வட்டார அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் பல்வேறு கலைத் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற 375 மாணவ மாணவியருக்கு சிங்கிபுரம், ராம்கோ சிமென்ட் நிறுவன துணைத் தலைவா் துரைசிங்க ராஜா தலைமையில், பணியாளா் துறை மேலாளா் மணிவேல், அலுவலா் முனியசாமி ஆகியோா் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா். ஆசிரியா் பயிற்றுநா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.

பட வரி: ஆா்.எ.எம்.சி.01, 02:

வாழப்பாடி வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கிய சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் நிறுவனத்தினா்.

Story image