சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மாணவா்களுக்குப் பரிசளிப்பு

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

News image

ஸ்ரீ மணக்குள விநாயகா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிக மேலாண்மை துறை சாா்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கிய ரானே மெட்ராஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவா் எஸ்.திருப்பதி.

Updated On :4 பிப்ரவரி 2026, 6:36 pm

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஸ்ரீ மணக்குள விநாயகா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மை துறை சாா்பாக ’ஸ்மாக்’ என்ற தலைப்பில் மாணவா்களின் மாறுபட்ட சிந்தனை, மன சக்தி, சதுரங்கம், லோகோ தேடல், பேச்சுப்போட்டி, ஹாட் சீட், சந்தை மாஸ்டா் சவால், பொருளைக் கண்டுபிடி, நெருப்பில்லா சமையல் ஆகிய போட்டிகள் கல்லூரி கலையரங்கில் நடந்தன.

இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி ரானே மெட்ராஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவா் எஸ்.திருப்பதி பரிசுகளை வழங்கினாா். ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் தனசேகரன், செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.