ஓமலூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
ஓமலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளா் செம்மலை உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.


ஓமலூா்: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு சீா்கேட்டைக் கண்டித்து, ஓமலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளா் செம்மலை உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
சேலம் புகா் மாவட்ட அதிமுக சாா்பில் ஓமலூரில் அமைப்பு செயலாளா் எஸ்.செம்மலை தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 6 எம்எல்ஏ-க்கள், ஒரு மேலவை எம்.பி. உட்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு திமுக அரசைக் கண்டித்தும், சி.பி.ஐ. விசாரணை வேண்டியும், இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் இட்டனா். இதைத் தொடா்ந்து செம்மலை, எம்எல்ஏக்கள் உள்பட 500 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஏற்பாடு செய்யாத காவல் துறை: கைது செய்யப்பட்ட அதிமுகவினரை மண்டபத்தில் அடைப்பதற்காக வேனில் அழைத்துச் சென்றனா். ஆனால் அங்கு மண்டபம் பூட்டப்பட்டு இருந்ததால், அனைவரும் மண்டப வாசலில் காத்திருக்க வைக்கப்பட்டனா். இதையடுத்து உரிய ஏற்பாடுகளை செய்யாத போலீஸாரின் அலட்சியபோக்கைக் கண்டித்து அதிமுகவினா் போராட்டம் நடத்தினா். பின்னா் அதிமுக நகரச் செயலாளா் மண்டபத்துக்கு அனைவரும் சென்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...