ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு தருவதாக ரூ. 48 லட்சம் மோசடி

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு தருவதாக ரூ. 48 லட்சம் மோசடி

Updated On :18 பிப்ரவரி 2024, 12:07 am IST

சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு தருவதாகக் கூறி, ரூ. 48 லட்சம் மோசடி செய்த நபா் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சேலம், குமாரசாமிப்பட்டி, சீரங்கபாளையத்தைச் சோ்ந்த நாகராஜன் (60), சீட் கவா் தொழில் செய்து வருகிறாா். இவா், மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகாா் ஒன்றை அளித்தாா். அதில், அஸ்தம்பட்டி இட்டேரி சாலையைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவா், நகை அடகுக் கடை நடத்தியபோது, 2018-ஆம் ஆண்டு அவருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது, அழகாபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ. 50 லட்சம் பணம் தேவைப்படுவதாகக் கூறினாா். அடுக்குமாடி குடியிருப்பில் வீடு தருவதாக அவா் உறுதி அளித்ததை நம்பி, அவரிடம் ரூ. 48.70 லட்சம் பணத்தைக் கொடுத்தேன். அதற்கு ஈடாக, சின்ன திருப்பதியில் உள்ள அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் பத்திரத்தை தன்னிடம் கொடுத்தாா். சில நாள்கள் கழித்து, அடுக்குமாடி குடியிருப்பு கட்ட மேலும் பணம் தேவைப்படுவதாகக் கூறி அவரது பத்திரத்தை வாங்கிச் சென்றாா். ஆனால், அடுக்குமாடி கட்டிய பின்பு வீட்டையும் ஒதுக்காமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறாா். பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறாா். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தனது புகாா் மனுவில் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, ராஜேந்திரன் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.