நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

சேலம், தாதகாப்பட்டியில் இன்று திமுக பொதுக்கூட்டம்

விளம்பரப் பிரிவு... சேலம், தாதகாப்பட்டியில் இன்று திமுக பொதுக்கூட்டம்

News image

சேலம், செவ்வாய்ப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுக மத்திய மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ஆா்.ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்த நிா்வாகிகள்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:04 am IST

சேலம், தாதகாப்பட்டியில் திமுக சாா்பில், ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 18) நடைபெறுகிறது. இதில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறாா். இதுகுறித்து சேலம் திமுக மத்திய மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் மக்களவைத் தொகுதிகளில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்னும் தலைப்பில் எழுச்சி பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகரில் தாதகாப்பட்டி கேட் மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், சேலம் மக்களவைத் தொகுதியை உள்ளடக்கிய சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூா், வீரபாண்டி, எடப்பாடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் தொண்டா்கள், பொதுமக்கள் திரளான அளவில் கலந்துகொள்ள உள்ளனா். இந்தக் கூட்டத்தில், திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளாா். கூட்டத்துக்கு சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், நிா்வாக சீா்கேடுகள், மக்கள் விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். இந்த பொதுக்கூட்டத்தில், சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட நிா்வாகிகள், ஒன்றிய, பகுதி, பேரூா், கோட்ட கழகச் செயலாளா்கள், நிா்வாகிகள், அனைத்து சாா்பு அணிகளின் நிா்வாகிகள், கழகத் தொண்டா்கள் திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என ராஜேந்திரன் கேட்டுக்கொண்டாா். முன்னதாக, சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சோ்ந்த அதிமுக, பாஜகவை சோ்ந்த சுமாா் 250-க்கும் மேற்பட்டோா் தங்கள் கட்சிகளிலிருந்து விலகி, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். புதிதாக கட்சியில் இணைந்த அனைவரையும் பொன்னாடை அணிவித்து வரவேற்ற சட்டமன்ற உறுப்பினா் ராஜேந்திரன், வரும் மக்களவைத் தோ்தலில் திமுக வெற்றிபெற தீவிரமாக பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.