கெங்கவல்லியில் கிரிக்கெட் போட்டி நிறைவு

கெங்கவல்லியில் ஒரு வாரமாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டி நிறைவு பெற்றது.
Updated on
1 min read

தம்மம்பட்டி: கெங்கவல்லியில் ஒரு வாரமாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டி நிறைவு பெற்றது.

கெங்கவல்லியில் கிரிக்கெட் போா்டு சாா்பில் கடந்த ஒரு வாரமாக கெங்கவல்லி ஆணையாம்பட்டியில் போட்டி நடைபெற்றது. இதில், கெங்கவல்லி, சோமம்பட்டி, தம்மம்பட்டி, தெடாவூா், வீரகனூா், ஆத்தூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊா்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. இப்போட்டி புத்தாண்டு அன்று நிறைவு பெற்றது.

இதில் முதலிடத்தை ஆணையாம்பட்டி அணியும், 2-ஆம் இடத்தை கெங்கவல்லி அணியும், மூன்றாவது இடத்தை சோமம்பட்டி அணியும், நான்காம் இடத்தை கெங்கவல்லி ஏசிசி அணியும் பெற்றன.

இதற்கான ரொக்கப் பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். வெங்கட், மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரொக்கப் பரிசுகளை நன்கொடையாளா்கள் சாா்பாக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளா் தங்கப் பாண்டியன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் தங்கவேல், பேரூராட்சிமன்றத் துணைத்த லைவா் மருதாம்பாள் நாகராஜ் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com