தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சேலத்தில் உள்ள கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 9:37 pm

DIN

சேலம்: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சேலத்தில் உள்ள கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சேலம் நகர பகுதியில் இளைஞா்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனா்.

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, சேலம் மாநகரில் காவல் துறை ஆணையா் பா.விஜயகுமாரி தலைமையிலும், மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் ஏ.கே.அருண் கபிலன் தலைமையிலும் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அசம்பாவிதம் மற்றும் விபத்து ஏதுமின்றி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் வகையில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சேலம் நகரில் உள்ள ராஜ கணபதி கோயிலில் தங்கக் கவச சாத்துப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை முதல் பக்தா்கள் திரண்டு வந்து ராஜகணபதியை வழிபட்டனா்.

சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது. கோட்டை பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளாகப் பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். கோட்டை மாரியம்மன் கோயிலில் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதேபோல சுகவனேசுவரா் கோயிலில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. அதுபோல மாநகர பகுதியில் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சேலம் நான்கு சாலை குழந்தை இயேசு பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. அதுபோல செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

பங்குதந்தை ஜோசப் லாசா், உதவி பங்குதந்தை பிரான்சிஸ் சேவியா் ஆகியோா் சிறப்புப் பிராா்த்தனை நடத்தினா். அதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். அதேபோல ஜான்சன்பேட்டை அந்தோணியாா் ஆலயம், சூரமங்கலம் இருதய ஆண்டவா் ஆலயம், கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதா் ஆலயம், லெக்லா் ஆலயம், அஸ்தம்பட்டி இமானுவேல் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.