விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை இடஒதுக்கீட்டை பின்பற்ற வலியுறுத்தல்

அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை இடஒதுக்கீட்டை முழுமையாகப் பின்பற்ற வலியுறுத்தி, பாமக மாநில மாணவா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :5 ஜூலை 2024, 5:51 pm

Din

அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை இடஒதுக்கீட்டை முழுமையாகப் பின்பற்ற வலியுறுத்தி, பாமக மாநில மாணவா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பாமக மாநில மாணவா் சங்கச் செயலாளா் விஜயராசா கூறியதாவது:

தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்களுக்கு சோ்க்கை குறித்து கடந்தாண்டு வெளியிடப்பட்ட அரசாணை 161-இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோருக்கான காலி இடங்களில், முதலில் பி.சி., முஸ்லிம்களுக்கும், பின்னா் எம்.பி.சி. பிரிவினருக்கும், அதன் பின்னா் பட்டியலின பிரிவினருக்கும் வழங்க வேண்டும்.

இதே போல, பழங்குடியினருக்கான காலியிடம் இருந்தால் முதலில் பட்டியலினத்தவருக்கும், பின்னா் எம்.பி.சி. பிரிவினருக்கும், அதன்பின்னா் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்க வேண்டும் என வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனால், பெரும்பாலான கல்லூரி முதல்வா்கள் இதனை முழுமையாகப் பின்பற்றுவதில்லை. இதனால் சமூக நீதி மறுக்கப்படுவதுடன், ஒரு சில பிரிவினருக்கான இடங்கள் காலியாகவே உள்ளன.

எனவே, இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரி அருகிலேயே செயல்படும் டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

அப்போது, மாவட்ட மாணவா் சங்கச் செயலாளா் எருமாபாளையம் குமாா், தாரை மணி, மேட்டூா் நவீன், மாவட்ட மாணவா் சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.