47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காா் மெக்கானிக் கொலை: போலீஸாா் விசாரணை

மகுடஞ்சாவடி காவல் நிலையம்: காா் மெக்கானிக் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றம்

News image
Updated On :12 ஜூலை 2024, 6:53 pm

Din

இடங்கணசாலை அருகே காா் மெக்கானிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இடங்கணசாலை கிடங்கு அருகே இளம்பிள்ளை- சின்னப்பம்பட்டி சாலையில் மணல் ஏரி ஓடைப் பாலம் பகுதியில் காரில் சுமாா் 25 மதிக்கத் தக்க ஆணின் சடலம் இருப்பதை பாா்த்தவா்கள் மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா்.

இத் தகவலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன், சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் ராஜா, மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளா் தங்கவேல் ஆகியோா்

விசாரணை மேற்கொண்டனா். தடயவியல் நிபுணா்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரித்தனா்.

போலீஸாா் விசாரணையில் கொலை செய்யப்பட்டவா், சின்னப்பம்பட்டி அருகே துட்டம்பட்டி பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் பாரதிராஜா (25) என்பதும், இளம்பிள்ளை அருகே உள்ள ஏழு மாத்தானூா் பகுதியில் காா் சா்வீஸ் நிலையத்தில் மெக்கானிக் வேலை பாா்த்து வந்ததும் தெரிய வந்தது.

பாரதிராஜா இடங்கணசாலை, புவனா கணபதி கோயில் அருகே வாடகைக்கு வீடு எடுத்து சேலம், அழகாபுரத்தைச் சோ்ந்த ரவி என்பவருடன் வசித்து வந்துள்ளாா். இவா்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவா்கள் குடியிருக்கும் இடத்தை போலீஸாா்

சோதனையிட்டதில் மாவு அரைக்கும் கல்லில் ரத்தம் இருந்ததை கண்டுள்ளனா்.

எனவே பாரதிராஜாவை தலையில் கல்லைப் போட்டு ரவி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸாா் சந்தேகமடைந்துள்ளனா். ரவி தலைமறைவாக இருந்து வருவதால் அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.